Categories
தேசிய செய்திகள்

மனைவி பிள்ளைகளை பார்க்க வேண்டும்…. பேருந்தை திருடி கொண்டு கிளம்பிய இளைஞன்… அதிரவைத்த சம்பவம்…!!

கேரளாவில் ஊரடங்கு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லாவை சேர்ந்த பினுப் என்பவர் வேலைக்காக வேறு இடத்தில் தங்கி வந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை காண முடியாமல் தவித்து வந்துள்ளார். அவர் சொந்த ஊர் செல்வதற்கு நான்கு மாவட்டங்கள் தாண்டி செல்ல வேண்டும். இதனால் தனியார் பேருந்து ஒன்றை திருடி அதைத்தானே ஓட்டி சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்துள்ளார்.

2, 3 இடத்தில் காவலர்கள் மறைத்து கேட்டபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்வதற்காக பேருந்தை ஓட்டி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து மற்றொரு இடத்தில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது அவர் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து, பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |