புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய வகை ஆந்தை வந்ததால் அதைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் புள்ளான்விடுதி கடைத்தெருவில் அரிய வகை ஆந்தை ஒன்று திடீரென வந்துள்ளது. மேலும் அந்த ஆந்தை பறக்க முடியாமல் தவித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆந்தையை மீட்டு ஒரு கூண்டுக்குள் வைத்து பாதுகாத்துள்ளனர்.
இதனையடுத்து அ’ந்த அரிய வகை ஆந்தையை பார்க்க பொது மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டிலிருந்து திறந்து விடப்பட்ட ஆந்தை பறந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய வகை ஆந்தை வெளிநாட்டை சேர்ந்தது என்று பொது மக்கள் கூறியுள்ளனர்.