இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வீரர்களின் பட்டியல் ,சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் , இஷாந்த் ஷர்மா,பும்ரா உமேஷ் யாதவ் ,முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இங்கிலாந்தின் காலநிலை சூழலுக்கு ஏற்ப ,இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறும்போது, இந்திய அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுள் ,ஒருவராக ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும், என்று கூறினார்.
இந்த இறுதி போட்டியில் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரை தொடர்ந்து, 3-வது வீரராக ஷர்துல் தாகூர் இருந்தால், பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி விளையாடியபோது சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் தவறிவிட்டது. அதோடு பேட்டிங்கிலும் சரியாக விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ,அந்நாட்டில் காலநிலைக்கு ஏற்ப சரியாக ஸ்விங் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இதனால் நியூசிலாந்தில் இருந்ததைப் போலவே, இங்கிலாந்திலும் கோடைக்காலத்தில் முதல் பாதியில் சூரியன் வெளிவராது என்பதால், 3 வது பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.