பஞ்சாப் மாநிலத்தில் நடமாடும் தகனமேடை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண உடலை எரிக்க ஆகும் செலவைவிட பகுதிதான் ஆகும் என்று கூறப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இறந்த உடல்களை எரிப்பதற்கு தகனமேடை இல்லாமலும் விறகு கட்டைகள் இல்லாமலும் பிணங்களை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடமாடும் தகன மேடை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சடலத்தை எரிக்கலாம். வழக்கமாக தகன மேடையில் வெப்பம் தணிய 48 மணி நேரம் ஆகும். ஆனால் இதில் 12 மணி நேரத்தில் வெப்பம் தணியும் வகையில் இன்சுலேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு உடலை எரிக்க ரூ.2,500 செலவாகும். இதில் பாதியே செலவாகும் என கூறுகின்றனர்.