ஸ்புட்னிக் வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்திய சந்தைகளில் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும், ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் இந்திய நிதி ஆயோக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவில் ரூ.995.40-க்கு விற்பனையாகிறது. இந்தியாவில் உற்பத்தி தொடங்கும்போது தடுப்பூசி விலை குறையும் என டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.