Categories
உலக செய்திகள்

கேபி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக பதவியேற்பு.. அதிபர் நேற்று நியமனம்..!!

நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், கே.பி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக அதிபரால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். 

நேபாளத்தில் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்டில், பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரியும் அதை  ஒப்புக்கொண்டார்.

ஆனால் நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவிற்கு தடை விதித்துவிட்டது. இதனால் குழப்பம் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 10ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதில் பிரதமர் சர்மா அரசாங்கம் தோல்வியை சந்தித்தது.

அதன்பின்பு வரும் 13ம் தேதிக்குள் ஆட்சி அமைப்பதற்கு தகுதி இருக்கும் கட்சிகள் அதிபரிடம் உரிமை பெறலாம் என்று அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. எனவே எதிர்க்கட்சியாகவுள்ள நேபாள காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பை தவறிவிட்டன.

இதனால் அதிபர், பிரதமர் சர்மாவை மீண்டும் பிரதமராக நேற்று நியமித்த நிலையில் இன்று அவர் பதவியேற்கவிருக்குகிறார்.

Categories

Tech |