Categories
உலக செய்திகள்

“அனில் அம்பானியின் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடுங்கள்!”.. ஸ்விஸ் நீதிமன்றத்தின் சூப்பர் தீர்ப்பு..!!

சுவிற்சர்லாந்து பெடரல் நீதிமன்றம், அனில் அம்பானி குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய நிதி அமைச்சகத்தின் பிறநாட்டு வரி மற்றும் ஆய்வு பிரிவு, சுவிற்சர்லாந்திடம், கடந்த 2011ம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து, 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வரை உள்ள கணக்கு தொடர்பான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் சுவிஸ் நீதிமன்றம் அந்த விவரங்களை வழங்க உத்தரவிட்டதற்கான நகலை உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

ஸ்விஸ் வங்கிகள் தற்போது வரை அவர்களிடம் கணக்கு வைத்துள்ளவர்களின் தகவல்களை வெளியிட்டதில்லை. ரகசியமாகத் தான் வைத்திருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் இனிமேல் சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் பெற்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அதிகாரிகள் கேட்கும் தகவல்களை ஸ்விஸ் வங்கிகள் வழங்கும் பட்சத்தில் அம்பானி குடும்பத்தார் மீதிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? என்பது தொடர்பில் தெளிவு கிடைக்கும். எனவே இந்த தீர்ப்பு மிகவும் சரியானதாக கருதப்படுகிறது.

Categories

Tech |