இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மே 23ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.