இந்தியாவிற்கு உதவும் நோக்கில், கனடா அனுப்பிய 300 வென்டிலேட்டர்கள் வந்துசேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் கனடா அரசு சுமார் 300 வெண்டிலேட்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது.
அவை இந்தியாவிற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய வெளிவிவகாரத்துறை முகநூல் தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் “சர்வதேச ஒத்துழைப்பு தொடர்கிறது, நமது தோழனான கனடா 300 வென்டிலேட்டர்களை அனுப்பியிருப்பதை நன்றியுடன் பெற்றிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிற்கு 50 வென்டிலேட்டர்களும் 25000 Remdesivir போத்தல்களும் வந்திருக்கின்றன. மேலும் இத்தாலி, ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய 30 இயந்திரங்களும், 2 வென்டிலேட்டர்களும் இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.