Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர அடிச்சுக்க ஆளே இல்ல” …! “விராட்கோலி தான் எப்பவுமே நம்பர் ஒன் “…! புகழ்ந்து தள்ளிய முகமது யூசப் …!!!

முன்னாள் வீரர்களுடன் ,தற்போதுள்ள வீரர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவானான முகமது யூசப் கூறியுள்ளார்.

இந்திய அணியில் கேப்டனான விராட் கோலி, போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவரை முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இதனால் பாபர் அசாமை , விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர். விராட் கோலி போட்டித் தொடரில்  மட்டுமல்லாது, உடல் தகுதியிலும் சிறப்பான பிட்னஸை  கடைப்பிடித்து வருகிறார். இதுபற்றி பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்த  முகமது யூசுப் ,விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரில் சிறந்த வீரர்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, விராட் கோலி பயிற்சி பெறுவதை நான் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய பயிற்சிபெறும் வீடியோக்களை ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்துள்ளேன். தற்போதுள்ள காலகட்டத்தில் மாடர்ன் கிரிக்கெட் என்றால், அதற்கு முக்கியமாக நல்ல பயிற்சி தான் என்று சொல்வேன். விராட் கோலியின் நல்ல பயிற்சிதான், அவருடைய அபாரமான ஆட்டத்திற்கு பின்னால் செயல்படுகிறது . அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்களும் ,ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களும் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரன்களை நெருங்கி வருகிறார். எனவே மூன்று வடிவிலான போட்டியிலும் ,விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வருகிறார். அதோடு விராட் கோலியின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் அமைந்துள்ளதாக, அவர் கூறினார்

Categories

Tech |