கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று குழப்பமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சிக்கல்கள் தீரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். யோசனை செய்து பின்னர் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் கைகொடுக்கும். நட்பு வட்டாரம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது பெரிய தொகையை எடுத்துச்செல்ல வேண்டாம். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் இருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிரிகளின் தொல்லை விலகிச் செல்லும். நினைப்பது நடந்துவிடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் உயர்வு உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு பணிகளை செய்து வாருங்கள், முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம்பச்சை நிறம்.