இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடுகள் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் காத்திருக்காமல் தற்காலிகமாக இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.