சிகிச்சையில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்றை ட்விட்டர் வெளியிட்டுள்ளார்.
14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு, இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் போது ,காயம் ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகினார் .ஆனால் ஐபில் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியில் புதுமுக இளம் வீரர்கள் ,ஆதிக்கத்தை செலுத்தி விட ஆரம்பித்து விட்டன. இதனை ஸ்ரேயாஸ் அய்யர் புரிந்து கொண்டு, தற்போது இலங்கையில் விளையாடவுள்ள போட்டித் தொடரில் பங்கு பெறுவதற்காக உடற்பயிற்சியை எடுத்துக்கொண்டு வருகிறார்.
தற்போது இந்த இலங்கையில் விளையாட உள்ள தொடரில் , இந்திய அணி கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள், என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஸ்ரேயாஸ் அய்யர் ,நல்ல உடல் தகுதியுடன் பிட்டாக இருந்தால் , நிச்சயமாக இந்த தொடரில் கேப்டனாக இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. அதேசமயம் ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது . இந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது ட்விட்டர் பக்கத்தில் தீவிர உடற்பயிற்சியில், ஈடுபட்டு வருவதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி விளையாட உள்ள இந்தத் தொடரில் ,சிறப்பாக விளையாடும் வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Work in progress 🚧 Watch this space 😏 pic.twitter.com/HyVC8036yh
— Shreyas Iyer (@ShreyasIyer15) May 13, 2021