நெல்லையில் உதவி பேராசிரியரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி பாளையங்கோட்டையிலிருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தார். அதில், மாணவி பயிலும் கல்லூரியினுடைய உதவிப்பேராசிரியர் அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறியதோடு மட்டுமல்லாமல் காரில் கூட்டிச் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் பேராசிரியர் செல்போனில் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவரை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் உதவி பேராசிரியரின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்