Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து ….கூலித் தொழிலாளி பலியான சோகம் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே ,கூலித் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அடுத்துள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  39 வயதான முத்து , தன் மனைவி  நீலாவுடன்(வயது 30) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த, பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாம்பு கடித்த முத்துவை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டரான  சக்திவேல் தலைமையில் , போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூலித் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்த உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |