Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள்… 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் கிடைக்கும்…!!

இந்த ஆண்டு இறுதிக்குள் 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்திய சந்தைகளில் அடுத்தவாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும், ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் இந்திய நிதி ஆயோக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 85 கோடி ஸ்புட்னிக் வி டோஸ்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று ரஷ்ய நேரடி முதலீடு நிதியத்தின் செயல் தலைவர் கிரில் திமித்ரீவ் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான அடுத்து தொகுதி ஸ்புட்னிக் மருந்துகள் வரும் வாரங்களில் வந்துசேரும். ஒரு டோஸ் மட்டுமே போதுமான ஸ்புட்னிக் வி லைட் தடுப்பூசியும் விரைவில் இந்தியாவிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |