மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நாளை முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மே 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளான திருமணம், இழப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளும் வெளியேயும் பயணிக்க இ- பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஏடிஎம், பெட்ரோல், டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல் செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் திறக்கப்படலாம். காய்கறி, பூ, பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நாளைமுதல் செயல்பட அனுமதி இல்லை. மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் 6 கோடி வரை மட்டுமே நாளை முதல் செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளது.