கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேட்டுக்கொண்டிருந்தார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்று எச்சரித்திருந்தது. மேலும் மே 17ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக தமிழகத்தில் பரவி வருகிறது. எனவே போதிய மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் அல்லல் படுவது தன்னை துயரப்பட செய்கிறது. மக்களை காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்று சுட்டிக்காட்டி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.