முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோல் தெலுங்கில் சலார் எனும் படத்திலும் நடித்து வருகிறார். பிஸியான நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்களைப் போல எனக்கும் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் நான் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. ஆகையால் ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் நான் படப்பிடிப்புக்கு செல்வேன். கடந்த 11 ஆண்டுகளாக நானே சுயமாக சம்பாதித்து எனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்.
மேலும் எனது வாழ்க்கை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை நானே சுயமாக எடுப்பதில் பெருமை கொள்கிறேன். இதோடு கொரோனா தொடங்குவதற்கு முன் நானே சொந்தமாக வீடு வாங்கினேன். ஆகையால் கடவுள் எப்போதும் என்னுடன் துணை இருக்கிறார் என்று நம்புகிறேன். மேலும் நீங்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வீட்டில், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.