தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இன்று முதல் தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை. காய்கறி, மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளை திறக்க அனுமதி இல்லை.