தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல். தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே கனமழை பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.