Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கேயும் இப்படிதான் நடந்துச்சா… அக்காள்-தங்கைக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரே நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு…!!

அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி பகுதியில் குருமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டிக் கடையை வைத்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் முத்துமாரியின் தங்கையான சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தற்போது வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அக்கா, தங்கை இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு மதிய வேளையில் தங்களது வீட்டிற்கு உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். இதனையடுத்து முத்துமாரி வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருப்பதை கண்டு  உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது தங்கையான சீதாலட்சுமியிடம் தெரிவிக்க சென்றார். அங்கும் சீதாலட்சுமியின் வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 20 பவுன் நகையை பகல் நேரத்தில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் இரு வீடுகளில் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |