Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப முக்கியம்… அதிகாரிகளின் தீவிர சோதனை… பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி கோவில்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு குழுவினரை அமைத்து விதிமுறைகளை முறையாக பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்களுக்கு கண்காணிப்பு குழுவினர் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு அரசு நெறிப்படுத்திய கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |