Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணிச்சலுடன் செயல்பட்ட பெண்…. மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை வீட்டார்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பெண்ணிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கௌரிசங்கர்-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணத்தின் போது மாலதியின் பெற்றோர் 51 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகள் ஆகியவற்றை மாப்பிள்ளையின் வீட்டிற்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கௌரிசங்கரும் அவரது குடும்பத்தினரும் மாலதியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மாலதி சமயம்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கௌரிசங்கர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கௌரிசங்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |