Categories
மாநில செய்திகள்

BREAKING: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்… சோகம்…!!!

விடுதலை சிறுத்தை கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் சென்னையில் காலமானார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்களது உறவினர்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் ஒரு முக்கிய பிரபலம் காலமாகியுள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். முகமது யூசுப் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும் என திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலர் யூசுப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |