ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் டாக்டர் அதிபதி என்பவரும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கைதான தினேஷிடம் இருந்து டாக்டர் அதிபதி ரெம்டெசிவிர் மருந்தை வாங்கியதும், அதனை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.