Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை… வேகமா போய் வாங்கிக்கோங்க…!!

சென்னையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து நேரு உள்விளையாட்டு அரங்கில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு மேலும் கடுமையாக்கபடுவதாக கூறி பல கட்டுப்பாடுகளையும் வெளியிட்டார்.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து பல மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மொத்தம் 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி நாள்தோறும் 300 பேருக்கு ரெம்டெசிவர் மருந்துகள் வழங்கப்படும். மேலும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செயல்படும் ரெம்டெசிவர் விற்பனையகம் இனி செயல்படாது என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |