கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நகர்ப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்து உள்ளனர்.
இதில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் பெருமாள்பட்டி பகுதியில் வசித்து வரும் ராமர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவையும் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.