குழந்தை திருமணங்கள் நடைபெறுவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கலெக்டர் கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டங்களில் பல மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-ன் படி 21 வயது நிறைவடையாத ஆணிற்கும், 18 வயது முடிவு பெறாத பெண்ணிற்கும் நடைபெறும் திருமணமானது சட்டப்படி மிகப் பெரும் குற்றமாகும். இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீதா லட்சுமி கூறும்போது, இவ்வாறு சட்டத்தை மீறி பெரியவர்களே முன்னின்று நடத்தும் திருமணத்திற்கு இரண்டு ஆண்டு கால தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புற பகுதிகளில் ஏதேனும் குழந்தை திருமணம் நடைபெறுவதை அறிந்தால் குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், நீதிபதி, குழந்தைகள் நல குழுமம் போன்றவர்களுக்கு 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.