வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன்-லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் மாலை வழக்கம் போல் ராதாகிருஷ்ணன் லட்சுமி இருவரும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அந்த சமயத்தில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் உள்ளிட்டவைகள் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.