Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேம்படுத்தப்படும் வசதிகள்… அதிகாரிகளின் திடீர் ஆய்வு… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடுகள்…!!

கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் தனியார் பள்ளியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு படுக்கை வசதிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் கோத்தகிரி அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி கலெக்டர், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் கோத்தகிரி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து, அங்கு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டுள்ளனரா என விசாரித்துள்ளனர்.

Categories

Tech |