சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் திடீரென நேற்று காலை முதல் சூறாவளி காற்று வீசியுள்ளது. இதனால் மறவமங்கலம், காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மின்சார வினியோகம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் மறவமங்கலம் துணை மின் நிலையத்தின் கீழ் இயங்கும் பாஸ்டின் நகர், வளையம்பட்டி , பருத்தி கண்மாய், புலிக்கண்மாய் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மேலும் இதுபோன்ற மின்தடை ஏற்படாமல் தவிர்க்க மாதாந்திர பராமரிப்பு பணியின் போது மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள மரங்களை அகற்றி மின் பாதையை சரி செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.