Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு…. வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர்…. அபராதம் விதித்த காவல்துறை….!!

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த இரு நாட்களாக மதுரையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிக கடுமையாக இருக்கும் என காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |