Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பதற்கு முன்பும் கடமை தவறவில்லை… 10 ஆயிரத்திற்கும் மேல் தாண்டிய எண்ணிக்கை… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தைரியமாக பிடித்தவர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் ஸ்டான்லி பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேமராமேனாக பொதிகை தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் ஸ்டான்லி பாம்பு பிடிக்கும் நிபுணராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். இவருக்கு தெரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செட்ரிக் என்ற மகனும், ஷெரின் இம்மானுவேல் என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஸ்டாலின் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்குள் புகுந்த பாம்புகளை பயமின்றி பிடித்து தீயணைப்பு துறையினர் மற்றும் வனத் துறையினருக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார்.

இவ்வாறு ஸ்டான்லி கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்டான்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு கூட ஒரு பெரிய பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஸ்டான்லி ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |