Categories
உலக செய்திகள்

“ஹரி முட்டாள் இல்லை!”.. எல்லாம் தெரிந்தே தான் செய்கிறார்.. முக்கிய நபர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி முட்டாள் கிடையாது என்று ராஜ குடும்பத்தின் வரலாற்று ஆசிரியர் தெரிவித்துள்ளார்.  

பிரிட்டன் ராஜ குடும்பத்தினுடைய வாழ்க்கை வரலாற்று ஆசிரியராக இருப்பவர் ஏஞ்சலா லேவின். இவர் நேற்று “குட் மார்னிங் பிரிட்டன்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, மக்கள் இளவரசர் ஹரியை முட்டாள் என்கின்றனர், எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.

அவர் அனைத்தையும் நன்கு உணர்ந்து தான் செய்து கொண்டிருக்கிறார். ஏனெனில் அவருக்கும் அவரது மனைவி மேகனுக்கும், அரச குடும்பத்தினர் அநியாயம் செய்ததாக எண்ணுகிறார். மேலும் ஹரியின் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கின் போது இது தொடர்பான பெரிய பிரச்சனைகளை தீர்க்க முடியாது.

இனிமேல் ஹரியை ராயல் குடும்பத்தினர் நம்பமாட்டார்கள். மேகன் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் பிரச்சனை சரி வருமா? என்று தெரியாது. ஆனால் ஹரி-மேகன் இருவரும் இரக்க குணம் குறித்து பேசிவருகிறார்கள். அது அர்த்தமில்லாதது. ஏனெனில் அவர்கள் இருவருமே இரக்கமுடையவர்கள் கிடையாது.

ஹரி நடந்தவற்றை புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கவில்லை என்பதை நினைத்தால் அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது. (இளவரசரின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஹரியுடன் இவர் 2018ஆம் வருடம் முழுவதும் செலவிட்டிருக்கிறார்) எனவே, அவர் கூறியுள்ளதாவது, ஹரி நேர்மையான குணம் கொண்டவர், நிறைய பிரச்சனைகள் அவருக்கு இருந்தது.

எனினும் குடும்பத்தினரின் அவரது பிரச்சினைகளை கண்டறியவில்லை. தற்போது அவரை  பயங்கரமாக மூளைச்சலவை செய்தது போன்று தான் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |