டவ்தே புயல் முன்னெச்சரிக்கை குறித்து இன்று மாலை என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரபிக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ் தே புயலாக உருவாகியுள்ளது.
இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே கனமழை பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் டவ்தே புயல் முன்னெச்சரிக்கை குறித்து இன்று மாலை என்டிஎம்ஏ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.