Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வருங்காலத்தில் நீங்களும் இப்படி ஆகணும்… சகோதரிகளின் வியக்க வைக்கும் செயல்… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

திருப்பத்தூரில் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதிக்கு சகோதரிகள் உண்டியல் பணத்தை வழங்கியிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் குமார் மற்றும்  சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு அர்ஷிதா மற்றும் சத்யாஸ்ரீ என்ற மகள்கள் இருக்கின்றனர்.

இந்த சகோதரிகள் இருவரும் சேர்ந்து அவர்களுடைய உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண தொகைக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த சகோதரிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி, வருங்காலத்தில் நீங்கள் நன்றாக படித்து போலீஸ் சூப்பிரண்டாக வரவேண்டுமென்று வாழ்த்து கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் கொண்டுவந்த உண்டியல் பணத்தை உடைத்துப் பார்த்ததில் சுமார் 1,095 ரூபாய் இருந்தது.

Categories

Tech |