இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப்பை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாட்ஸ் அப் நிறுவனமானது புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பயனாளர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் வாட்ஸ்அப் இன் புதிய விதிகளை ஏற்பதற்கு இன்றே கடைசி நாள். ஒரு வேளை பயனாளர்கள் இன்றைக்கும் தனியுரிமைக் கொள்கை ஏற்காவிட்டால் அவர்கள் கணக்கு நீக்கப்படாது. ஆனால் படிப்படியாக சேவைகள் குறைக்கப்படும். அதன்படி தனியுரிமைக் கொள்கையை ஏற்காமல் இருந்தால் அழைப்புகள், நோட்டிபிகேஷன்கள் வராது. இறுதியாக மெசேஜ்கள் உள்ளிட்ட அனைத்து நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.