மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரிலீஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை பரசுராம் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் . தற்போது கொரொனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அதாவது வங்கி மோசடியை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் மகேஷ்பாபு வங்கி மேலாளராகவும், நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது உதவியாளராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.