Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. மக்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளையும் பலர் கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினாலும் குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |