Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘சூரரைப்போற்று’…. சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் சூரரைப்போற்று திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஹாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதன்படி ஹாங்காயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜூன் மாதம் 17ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் தற்போது கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் கடும் கட்டுப்பாடுகளுடனே இந்நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |