வயிறு வலியால் துடித்த இளம்பெண் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னல்பட்டி பகுதியில் முத்துசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பூமாதேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவிக்கு அடிக்கடி வயிறு வலி வந்துள்ளது. இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிறுவலி குணமடையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பூமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த முறப்பநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.