அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாகவே சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைகின்றனர். இந்த பயணம் சில சமயங்களில் ஆபத்தாகவே முடிகிறது. இந்த நிலையில் லிபியாவை சேர்ந்த அகதிகள் அண்டை நாடான துனிசியா வழியாக இத்தாலி செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். அந்த படகில் மொத்தம் 19 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த படகு நேற்று முன்தினம் துனிசியாவின் தெற்கு பகுதியில் உள்ள சார்பில் நகரின் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கடலில் கவிழ்ந்து உள்ளது. இதில் படகுகளில் பயணம் செய்த அனைவரும் நீரில் தத்தளித்த உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் பெண்கள் குழந்தைகள் உட்பட மொத்தம் 17 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்த இரண்டு பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.