வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பது குறித்து மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியாவில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட , பல இடங்களில் வாக்காளர்களாக இருந்து வருகின்றார்.இதனால் சில குளறுபிடிகள் நடைபெறுகின்றது.எனவே வாக்காளர்களை முறையாக சீர்படுத்துவர்க்கு வாக்காளரின் ஆதார் எண்கள் அவசியமாகின்றது.
எனவே புதிய மற்றும் பழைய வாக்காளர்களின் ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதி வேண்டும். இதற்க்கு அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்தி ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் இணைப்பு தடை குறித்து நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.