மே 31-ஆம் தேதி வரை திரைத்துறை சார்ந்த பணிகள் நடைபெறாது என ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதல் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல துறைகள் செயல்படாமல் உள்ளன. இதையடுத்து தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை திரைத்துறை பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.