Categories
தேசிய செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில்… உயிரிழந்த இந்திய பெண்… விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது…!!

இஸ்ரேலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண்ணை இன்று சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கில் உள்ள கீரித்தோடு காஞ்சிரம் தானம் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சவுமியா(32) செவிலியர் படிப்பை முடித்திருந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள காசாநகரில் ஒரு வீட்டில் கவனிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்திவந்துள்ளனர். இதனையடுத்து  கடந்த மே 11ஆம் தேதி சவுமியா தனது கணவருக்கு இச்சம்பவம் குறித்து  செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலில் சவுமியா உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதனை அறிந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு சவுமியாவின் உடலை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்ற இஸ்ரேல் அரசு சௌமியாவின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி இன்று காலை விமானத்தின் மூலம் சௌமியாவின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சவுமியாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |