Categories
மாநில செய்திகள்

ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்… தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு மேலும் கடுமையாக்கபடுவதாக கூறி பல கட்டுப்பாடுகளையும் வெளியிட்டார்.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து பல மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அப்போது தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழக அரசு உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது. 70 நாட்களுக்குள் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட வேண்டுமென ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |