வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் ஒரே நாளில் 600 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரே வாரத்தில் 4 ஆயிரத்து 302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதனையடுத்து கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப் பிரச்சனை, மூச்சுத் திணறல் இருப்பதால் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றது. இதனால் கூடுதலாக படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி காணப்படுவதால், மருத்துவமனைக்கு எதிரே சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.