சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சிவாங்கி, சாம் விஷால் இருவரும் இணைந்து முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்தவர் சிவாங்கி. இவர் இந்த நிகழ்ச்சியில் தனது குழந்தைத்தனமான பேச்சு மற்றும் குறும்புத்தனமான சேட்டைகள் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் . மேலும் சிவாங்கியை போலவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தான் ஷாம் விஷால். இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
#TalkuLessuWorkuMore Vocals by @sivaangi_k & @samvishal0928 🎉
Official lyric video coming soon 😍#MurungakkaiChips @LIBRAProduc @FirstManFilms @AthulyaOfficial @dharankumar_c@Srijar_Director @dop_ramesh@J0min @onlynikil @narmadhaveni @pradeeprchinna @VarunNZ pic.twitter.com/DQMFSZykH8— Shanthnu (@imKBRshanthnu) May 13, 2021
இந்நிலையில் சிவாங்கி மற்றும் ஷாம் விஷால் இருவருக்கும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிரபல நடிகர் சாந்தனு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படத்தில் இடம்பெற்ற ‘டாக்கு லெஸ்ஸு வொர்க் மோர்’ என்ற பாடலை சிவாங்கி, ஷாம் விஷால் இருவரும் இணைந்து பாடியுள்ளதாகவும் விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளதாகவும் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்