Categories
உலக செய்திகள்

கையில் கத்தியை கொண்டு சுற்றிய வாலிபர்…. வீதியில் நின்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி….!!

சிட்னி நகரில் வீதியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெர்ட் நெய் என்ற வாலிபர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு வீதியில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் அவர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் 24 வயதுள்ள இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பலியானார். மேலும் 44 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். பின்னர் அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்துள்ளது.

இதில் மெர்ட் நெய் செய்த குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்துள்ளார். அதில் மெர்ட் நெய்க்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவர் முதல் 33 ஆண்டுகளுக்கு பரோலில் வர முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |